21 நாட்கள் லாக்டவுன்.... வங்கி கிளைகள் மூடப்படும் என்பது உண்மையா? நிலவரம் என்ன? - ShadowTV | Online News Media 24/7 | The Shadow Behind the Truths!

Header Ads

21 நாட்கள் லாக்டவுன்.... வங்கி கிளைகள் மூடப்படும் என்பது உண்மையா? நிலவரம் என்ன?

21 நாட்கள் லாக்டவுன்.... வங்கி கிளைகள் மூடப்படும் என்பது உண்மையா? நிலவரம் என்ன?

டெல்லி: கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் லாக்டவுன் நடைமுறையின் போது வங்கி கிளைகள் மூடப்பட்டுவிடும் என்கிற ஒரு வதந்தி பரவுகிறது. இத்தகைய வதந்தி சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது.

இத்தகைய வதந்திகள் பரவுவதற்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை. லாக்டவுன் காலத்திலும் கூட வாடிக்கையாளர்களுக்கான சேவையை வங்கிகள் வழங்கவே செய்கின்றன. வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கி வருவதாக மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தி வெளியீட்டுப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை வங்கிகளில் இருந்து எடுப்பது தொடர்பாக கவலைப்பட தேவை இல்லை என கூறியிருந்தார். மேலும் இந்திய வங்கிகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

News Courtesy : Oneindia

No comments

Powered by Blogger.