பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா!
லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா தொற்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து உள்ளது. பிரிட்டனில் இதுவரை 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் 578 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று (27 ம் தேதி) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். இவர் கூறியிருப்பதாவது:
எனக்கு கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்தது. இதனையடுத்து நான் சோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று உறுதியாகி விட்டதாக மருத்துவர்கள் கூறினர். நான் என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். அரசு நிர்வாகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார் .
பிரிட்டனில் பிரதமருக்கு கொரோனா தொற்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.
New courtesy: Dinamalar
Post a Comment