ரெப்போ வட்டிக் குறைப்பை வரவேற்கும் நிர்மலா சீதாராமன்! - ShadowTV | Online News Media 24/7 | The Shadow Behind the Truths!

Header Ads

ரெப்போ வட்டிக் குறைப்பை வரவேற்கும் நிர்மலா சீதாராமன்!

ரெப்போ வட்டிக் குறைப்பை வரவேற்கும் நிர்மலா சீதாராமன்!

கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கூலித் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயிகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற சூழலில் மத்திய அரசு தரப்பிலிருந்து நேற்று ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. கொரோனாவை விரட்டியடித்து, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதுபோன்ற சூழலில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் இன்று மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதேபோல, ரிவர்ஸ் ரெப்ப்போ வட்டி 4.9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் வீடு, வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் மிகப் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, இந்த அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து வங்கிகள் மாற்றத்தைக் கையிலெடுக்க வேண்டிய நேரம்வந்துவிட்டதாகவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டியுள்ளார்.

News Courtesy : Tamil Samayam

No comments

Powered by Blogger.