ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை! - ShadowTV | Online News Media 24/7 | The Shadow Behind the Truths!

Header Ads

ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை!


ஊரடங்கை பயன்படுத்தி அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை!

மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி மார்க்கெட்டில் விலை பட்டியல் வைத்து அதன்படி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி: ஊடரங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறிகள் இரு மடங்காக உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக தூத்துக்குடி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மூன்றாவது நாளாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்துமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


இருந்தபோதிலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையாக முக கவசம் அணிந்தவர்கள் மட்டும் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

குறையும் கொரோனா நோய்த்தொற்று பரவல்: ஈ, கொசுக்கள் மூலம் பரவுமா?

இந்த நிலையில், ஊடரங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறிகள் இரு மடங்காக உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக தூத்துக்குடி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பயன்படுத்தி தேங்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் இரு மடங்காக விலை உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி மார்க்கெட்டில் விலை பட்டியல் வைத்து அதன்படி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News Courtesy : Tamil Samayam

No comments

Powered by Blogger.